Home இந்தியா இந்தியாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை குடும்பம்

இந்தியாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை குடும்பம்

0

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படகின் உதவியுடன் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காரணம்

அந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடத்தப்பட்ட விசாரணைகளில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக இலங்கையர்கள் குழு விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version