Home இலங்கை அரசியல் விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்! சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் பதிவு

விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்! சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் பதிவு

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான நெகிழ்ச்சியான அனுபவம் ஒன்று குறித்து விமானப் பணிப்பெண் ஒருவரின் சமூக வலைத்தளப் பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அண்மையில் ஜேர்மனி சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கட்டார் எயார்வேஸ் விமானத்தில் நாடு திரும்பியிருந்தார்.

எளிமையான ஜனாதிபதி..

அதன்போது குறித்த விமானத்தில் பணியாற்றும் இலங்கையைச்சேர்ந்த பணிப்பெண்களில் ஒருவரான சேகா வீரகோன் என்பவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சென்று உரையாடியுள்ளதுடன், செல்ஃபி புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மிகவும் எளிமையாகவும், சிநேகபூர்வமாகவும் நடந்து கொண்டதாக தெரிவித்து அவர் நெகிழ்ச்சியுடன் இட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version