Home உலகம் கடும் பனிப்பொழிவினால் விமானங்களை ரத்து செய்த நாடு

கடும் பனிப்பொழிவினால் விமானங்களை ரத்து செய்த நாடு

0

ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ம்யூனிக் விமான நிலையதில் பனியை அகற்றும் பணிகள் காரணமாக ஒரு ஓடுதளம் மட்டுமே செயல்பட்டுள்ளதுடன்
முன்னெச்சரிக்கையாக, ம்யூனிக் விமான நிலையம் கடந்த சனிக்கிழமை(04) 35 விமானங்களை ரத்து செய்துள்ளது.

பனிபொழிவு

இதேவேளை, ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் பனியை அகற்றும் பணிகள் மேலும் நீண்டுள்ளன.

கோலோனில் இரவும் காலை பொழுதிலும் 10 செ.மீ அளவில் புது பனி பெய்ததாகவும் சில சாலைகள் பனி மூடிய நிலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் வானிலை சேவை நிர்வாகம் கடுமையான பனி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த கடுமையான குளிர்கால நிலை உலகளாவிய பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version