Home இலங்கை சமூகம் புரட்டிப்போடும் மழை – அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம்

புரட்டிப்போடும் மழை – அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கவிற்கு வந்த விமானம்

0

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்கவுக்கு வந்த விமானம் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்கவுக்கு வரவிருக்கும் விமானங்கள் தரையிறங்க முடியாத அவசர நிலை ஏற்பட்டால் அவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கும் திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க அறிவித்துள்ளார்.

நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.     

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (28) இரவு கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ‘ஏர் ஏசியா’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இந்தியாவின் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று இரவு 9.50 மணிக்கு இலங்கையை வந்தடையவிருந்தது.

அதன்படி, நாட்டிற்கு வரவிருந்த ஒரே ஒரு விமானம் மட்டுமே இதுவரை திருப்பி விடப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version