Home இலங்கை சமூகம் களனி ஆற்றின் வெள்ள அணையில் நீர் கசிவு – பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

களனி ஆற்றின் வெள்ள அணையில் நீர் கசிவு – பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள களனி ஆற்றின் வெள்ள அணையில் கசியும் நீரை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சுதர்சினி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

அணையின் நீர் மட்டம் உயர்வடைந்ததையடுத்து இன்று காலையிலிருந்து அணைக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் எழுப்பப்பட்டிருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாதுகாப்புக்கு மணல் மூடைகள்

நாகலகம் வீதியில் உள்ள நீரின் அளவு 8.5 ஆக குறைந்துள்ளது. அத்தோடு களனி ஆற்றின் நீரின் அளவும் நிலையான கட்டத்தை அடைந்துள்ளது.

இருந்தாலும் அணையை பாதுகாப்பதற்காக மணல் மூடைகள் போட்டப்பட்டு கசியும் நீரை பூரணமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அணையை கடந்து நீர் பாயும் அளவை எட்டவில்லை.அநாவசியமாக பயம் கொள்ளவும் பொய்ப் பிரசாங்களை பரப்ப வேண்டாம்.

இதை பார்ப்பதற்கு யாரும் வர வேண்டாம். அதனால் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

  

NO COMMENTS

Exit mobile version