இலங்கையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (17) காலை நீர்ப்பாசன திணைக்களம் (Irrigation Departmen) குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், அடுத்த 48 மணித்தியாலங்களில் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள (Bulathsinhala), பாலிந்தநுவர (Palindanuwara) மற்றும் மதுராவளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு (Madurawala Divisional Secretariat) வெள்ள அபாயம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும்
குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை திங்கட்கிழமை (19) காலை 09.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடா கங்கை மற்றும் மகுர கங்கை வெள்ள சமவெளி ஊடாக செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இதேவேளை தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.