திருகோணமலை மாவட்டத்தில் அசாதாரண காலநிலை நிறைந்த இந்த காலப்பகுதியில் உயிர் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் அனைத்து
முன்னாயத்த நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து
வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் குறித்து அவதானம் செலுத்தி அங்குள்ள மக்களை
பாதுகாப்பாக வெளியேற்றுதல் மற்றும் அவர்களுக்கான தங்குமிடம் உணவு தொடர்பாக
விசேட கவம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பாதிப்பு
பிரதான வீதிகளில் ஏற்படும் வெள்ள நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் சமிந்த ஹெட்டியாரச்சி மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த நிலமைகள் தொடரும் பட்சத்தில் மக்களுக்கு சேவையாற்ற தாம் தயார் நிலையில்
இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.