மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 4000ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட
அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பலர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை இன்று (28) அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தங்கல் முகாம்
இதன்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வசதிகளை
ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கல் குறித்து அரசாங்க அதிபர் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருவதன் காரணமாக மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
15900 குடும்பங்களை சேர்ந்த
40123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கள் முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை
இந்நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பெருமளவான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்போது வீடுகளில் வெள்ளம் புகுந்ததன்
காரணமாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருமளவான பகுதிகள்
வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதன் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள்
பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.