Home இலங்கை அரசியல் பொது பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கத் தயார்: பொன்சேகா பகிரங்கம்

பொது பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கத் தயார்: பொன்சேகா பகிரங்கம்

0

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாத சித்தாந்தம்

இதேவேளை, முஸ்லிம் சமூகத்திற்குள் “சூப்பர் முஸ்லிம்” என்ற ஒரு தீவிரவாத சித்தாந்தம் உருவாக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

எனினும், இது சாதாரண முஸ்லிம்களின் விருப்பம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சூப்பர் முஸ்லிம் என்ற இந்த சித்தாந்தம் ஒரு சிதைந்த தீவிரவாதப் போக்குக்கு இட்டுச் செல்வதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

இதன்படி, அவை தொடர்பான முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

  

NO COMMENTS

Exit mobile version