Home இலங்கை குற்றம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்த நபருக்கு எதிராக நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்த நபருக்கு எதிராக நடவடிக்கை

0

வெளிநாட்டு வேலைகளை பெற்றுத் தருவதாகக் கூறி 140 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார்.

சந்தேக நபர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக பொய்யான தகவல்களை கூறி பணம் பெற்று பலரை ஏமாற்றியதாக தெரியவந்துள்ளதென விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


மோசடி பிரிவு

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின் போது, ​​ஜா-எல பகுதியை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முக்கிய சந்தேக நபர், வழக்கறிஞரை தனது சட்டப் பிரதிநிதியாக நியமித்து வெளிநாட்டு செல்ல எதிர்பார்க்கும் மக்களை தன்னிடம் வரவழைத்ததாக மோசடி பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version