Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உகண்டா பிரஜை ஒருவர் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான உகண்டாவை சேர்ந்தவர் எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


போதைப்பொருள்

சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/foreign-tourist-arrested-in-katunayake-airport-1717908946

NO COMMENTS

Exit mobile version