யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பகுதியில் பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(4) வட்டுக்கோட்டை தபால் நிலையத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச்
செல்வதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் விடுதலை
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 பனை மர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.