Home இலங்கை சமூகம் இலங்கை மக்களை நெகிழ வைத்த வெளிநாட்டு தம்பதி

இலங்கை மக்களை நெகிழ வைத்த வெளிநாட்டு தம்பதி

0

இலங்கையில் நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக தமது ஓய்வூதியத்தை செலவிடும் வெளிநாட்டு தம்பதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் இந்துருவ பிரதேசத்தில் இந்த தம்பதி உதவுவதற்காக சென்றுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தம்பதி இலங்கைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ள நிலையில், அதிக காலம் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு உதவி

இலங்கையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் ஓய்வூதியத்துடன் இலங்கைக்கு வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் வாழும் மக்களையும் நேசிக்கும் இந்த தம்பதியினர் தமது செயற்பாடுகளுக்காக இந்துருவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Source: https://tamilwin.com/article/foreign-tourist-couple-in-sri-lanka-money-help-1718591126

NO COMMENTS

Exit mobile version