Home முக்கியச் செய்திகள் விமான நிலையத்தில் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விமான நிலையத்தில் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Katunayake Airport) மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய பிரஜை என தெரிவிக்கப்படுகின்றது.

டெடி பியர் பொம்மை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, 10 கிலோ 323 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று கரடி பொம்மைகளுக்குள் (Teddy Bear) மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version