Home இலங்கை குற்றம் ஜனாதிபதி அமர்ந்திருந்த இடத்துக்கு நேரே ட்ரோன் கமெரா பறக்கவிட்ட வெளிநாட்டவர் கைது

ஜனாதிபதி அமர்ந்திருந்த இடத்துக்கு நேரே ட்ரோன் கமெரா பறக்கவிட்ட வெளிநாட்டவர் கைது

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் ட்ரோன் கமெரா ஒன்றைப் பறக்கவிட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றைய (08) தினம் கண்டி எசல பெரஹரவைப் பார்வையிடச் சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெளிநாட்டவர் கைது

பெரஹரவைப் பார்வையிடச் சென்றிருந்த ஜனாதிபதி தலதா முன்றலின் வெட்டவெளிப் பகுதியொன்றில் இருந்த கொட்டகையில் அமர்ந்து பெரஹர நிகழ்வுகளைப் பார்வையிட்டிருந்தார்.

இதன் போது ஜனாதிபதி அமர்ந்திருந்த இடத்துக்கு நேரே வான்பரப்பில் ட்ரோன் கமெரா ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதைக் கண்ட விமானப்படையினர் உடனடியாக அதனை கீழிறக்கியுள்ளனர்.

அதனைப் பறக்கவிட்;ட கிரேக்க நாட்டவர் அதனையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அமர்ந்திருந்த இடத்துக்கு நேரே ட்ரோன் கமெராவை எதற்காகப் பறக்கவிட்டார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version