Home இலங்கை குற்றம் இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவரால் அச்சம் – தமிழர் பகுதிக்கு ஏற்படவுள்ள ஆபத்து

இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவரால் அச்சம் – தமிழர் பகுதிக்கு ஏற்படவுள்ள ஆபத்து

0

கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி கடற்கரையில் கூடாரம் ஒன்றில் 3 நாட்கள் தங்கியிருந்த இஸ்ரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கொண்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை மிரிஹான விசா இல்லாத வெளிநாட்டினர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்குமாறு திருகோணமலை நீதவான் ஜீவராணி கருப்பையா உத்தரவிட்டுள்ளார்.


தடுப்பு மையம்

இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தடுப்பு மையத்தின் நிர்வாக அதிகாரிக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வெளிநாட்டவரின் தகவலுக்கமைய, அவர் அருகம்பேயில் இருந்து வந்தவர் எனவும் அவர் ஒரு இஸ்ரேலிய பிரஜை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது அடையாளத்தை நிரூபிக்க கடவுச்சீட்டு விசா அல்லது அடையாள அட்டை எதுவும் அவரிடம் இல்லை எனவும் துறைமுக பொலிஸார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பொலிஸார் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

NO COMMENTS

Exit mobile version