அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தும் ஹங்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனமொன்றிலிருந்தும் இயங்கி வந்த ஒன்லைன் நிதி மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மடிக்கணினிகள் பறிமுதல்
மோசடியில் ஈடுபட்ட 29 சீன ஆண்கள், ஒரு சீனப் பெண், ஒரு இந்தியப் பிரஜை, மூன்று பெண்கள், இரண்டு தாய்லாந்து ஆண்கள் மற்றும் நான்கு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 499 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 24 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.