Home இலங்கை அரசியல் மீளபெறப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆளணி

மீளபெறப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆளணி

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்த பின்னர் அவர்களின் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஆளணி 116 பேரில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று டிஃபென்டர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஆளணி எண்ணிக்கை

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஆளணி எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு ஆளணி எண்ணிக்கை 58ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், கோட்டாபயவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version