Home இலங்கை குற்றம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

2017-2018ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை (Tenders) இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி கேள்வி மனுக்களை  செயற்படுத்தியதன் ஊடாக, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version