Home இலங்கை சமூகம் விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி : சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்

விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி : சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்

0

மட்டக்களப்பில் (Batticaloa)  இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் விடுதலைப் புலிகளின்
போராளி ஒருவர் உயிரிழந்தள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன்
வினோசித் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மோதி விபத்து

உயிரிழந்த குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையிலுள்ள
மதுபானசாலை ஒன்றில் இருந்து சம்பவதினமான நேற்று (15) இரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக
வீதிக்கு நடந்து வந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி : சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம் | Former Ltte Fighter Involved In Accident In Batti

இந்த நிலையில், வீதியில் பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்
மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே போராளி
உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் அதனை அங்கு
விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

பிரேத பரிசோதனை

பின்பு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு
காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து காவல்துறையினர்
மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் போராளி புனர்வாழ்வு பெறவில்லை
என்பதுடன் ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version