Home இலங்கை அரசியல் தரமற்ற மருந்து கொள்வனவு: ஹரின் பெர்னாண்டோ அளித்த பதில்!

தரமற்ற மருந்து கொள்வனவு: ஹரின் பெர்னாண்டோ அளித்த பதில்!

0

தரமற்ற மருந்து கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்புக்கூற முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று(22.11.2024) சென்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல (Kehalia Rambukwella)சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

தரமற்ற மருந்து இறக்குமதி

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ அமைச்சரவையில் ஒரு நாளைக்கு குறைந்தது 60 முதல் 70 வரையிலான அமைச்சரவை பத்திரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.

பொதுவாக அந்த அமைச்சுகளின் செயலாளர்கள் அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பார்கள். அதை அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார்.

அவ்வாறு சமர்ப்பித்தவுடன் நிதி அமைச்சு அதற்கு பரிந்துரை வழங்குகின்றது. இதுவே நிலையான நடைமுறையாகும்.

ஆகவே, மற்ற அமைச்சரவை அமைச்சர்கள் இதற்கு பொறுப்புக்கூற முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version