Home இலங்கை சமூகம் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் வருடம் அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சோளம் விதைகளை முறைகேடான வகையில் தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்தளித்து ஊழல் செய்துள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விளக்கமறியல்

மேற்குறித்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளைப் புலன்விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலங்களை பெற நடவடிக்கை

அத்துடன் அதற்கு முன்னதாக கிராமிய மட்டங்களில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்களான சாட்சியாளர்களின் வாக்குமூலங்களைப் பதிந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version