Home இலங்கை அரசியல் மற்றுமொரு பிரபல முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை

மற்றுமொரு பிரபல முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை

0

பிரபலமான மற்றொரு முன்னாள் அமைச்சர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் கைது நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் காப்பீடு வழங்குவதில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்ய திட்டம்

மேலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்னாள் அமைச்சர் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

குறித்த அரசியல்வாதி ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநித்துவப்படுத்திய பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எரிவாயு சின்ன கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version