Home இலங்கை குற்றம் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

0

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா(Gamini Vijith Vijithamuni Soysa), பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்கள் கொண்டு பொருத்தப்பட்ட ட்ரக் வண்டியொன்று , கடந்த மாதம் ஹப்புத்தளையில் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

பொலிசாரினால் கைது 

அதனையடுத்து குறித்த வண்டியின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் கடந்த 14ஆம் திகதி பாணந்துறை வலான மோசடித்தடுப்புப் பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

‘விசாரணையின் இடையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டு, நாளைய தினம் (20) அவரை மீண்டும் வலான மோசடித்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version