Home இலங்கை அரசியல் கட்சி அரசியலிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்

கட்சி அரசியலிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்

0

கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தொகுத்த “IMF சிக்கலான தீர்வுகள்” (குறிக்கோளின் ஒப்பீட்டு ஆய்வு) புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (17.11.2025) மாலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்துரையாற்றிய அவர்,


கட்சி அரசியல்

“இந்த நாட்டு மக்கள் பல எதிர்ப்பார்ப்புகளுடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர்.ஆனால் அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.ஆதலால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடைக்கு வருவர்.

ஆனால் நான் கலந்து கொள்ள மாட்டேன்.ஏனென்றால் கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பதால் ஆகும் என்றார்.

நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version