Home இலங்கை குற்றம் இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

0

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில்,
கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவி விடுதலை
செய்யப்பட்ட தகவலும் சேர்ந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா
பெர்னாண்டோவின் விடுதலையும் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழேயே
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு பெண்களைக் கடத்தி

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனியவின்
வழக்கு விசாரணையின்போதே இந்த தகவலை சட்டமா அதிபர் திணைக்களம்
வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இரண்டு பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக குறித்த அமைச்சரின்
மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி மன்னிப்பின்கீழ்
அவர், 2009இல் விடுவிக்கப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version