கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தாலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமாக வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து, அவற்றை பதிவு செய்யாமல் ஓட்டும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
“பொதுவாக, எங்கள் கிராமங்களில் மக்கள் பொலிஸாருக்கு பயந்து ஒளிந்து கொள்கிறார்கள்.
சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்
கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? நாங்கள் தேடுகிறோம், ஐஜிபி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்.
யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்திற்கும் பயப்பட வேண்டும்.
கடந்த காலத்தில், இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களிடம் வாகனங்கள் உள்ளன.
வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் வீதியில் இயக்கப்படுகின்றன.
அதற்கு என்ன அர்த்தம்? அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்தச் சட்டங்களும் இல்லை என்பதா?
