முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
மொனராகலை பிபில வீதியில் நக்கலவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காயமடையவில்லை என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் உறுப்பினர் ஓட்டிச் சென்ற கெப் வண்டிக்குள் திடீரென புகுந்த குளவியை விரட்ட முற்பட்ட போது அதனை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.