Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

ரணிலுக்கு சி.ஐ.டியிடமிருந்து பறந்த அவசர அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆறாம் மாதம் 11ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். 

முன்னாள் ஜனாதிபதி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியிருந்தார். 

மேலும், கடந்த 4ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரான சாண்ட்ரா பெரேராகுற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version