Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினங்கள்! அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினங்கள்! அரசாங்கம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

0

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்காக 2017 முதல் 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை அரசாங்கம் 491.2 மில்லியன் ரூபாய் (ரூ. 491,203,422) செலவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் ஓய்வூதியங்கள், வாகனங்கள் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகள் இதில் அடங்கியுள்ளன.

அறிக்கையின்படி, ஹேமா பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் 2017 முதல் சலுகைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் 

மேலும், மைத்திரிபால சிறிசேன 2019 முதலும் கோட்டாபய ராஜபக்ச 2022 முதலும் மற்றும் ரணில் விக்ரமசிங்க 2024 முதலும் சலுகைகளைப் பெற்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version