Home இலங்கை அரசியல் விளக்கமறியலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்..! வெடி கொழுத்திக் கொண்டாடிய மக்கள்

விளக்கமறியலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்..! வெடி கொழுத்திக் கொண்டாடிய மக்கள்

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் (S. Viyalendiran) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (25.03.2025) இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு 

இலஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

எனினும், கைதுக்கான காரணத்தை இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
உடனடியாக வெளியிடவில்லை. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கைது விவகாரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய உள்ளது,

சம்பவதினமான நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும், அந்தபகுதி வெடி சத்தத்தினால் அதிர்ந்ததுடன் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

https://www.youtube.com/embed/w9PDDE62YEw

NO COMMENTS

Exit mobile version