Home இலங்கை சமூகம் நிகழ்நிலையில் பெருந்தொகை மோசடி! சிக்கிய நான்கு சந்தேக நபர்கள்

நிகழ்நிலையில் பெருந்தொகை மோசடி! சிக்கிய நான்கு சந்தேக நபர்கள்

0

தண்ணீர் மோட்டார் வாங்குவதாக கூறி ஒரு நபரிடமிருந்து ரூ.569,610 மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட குழுவில் முக்கிய சந்தேக நபரும் நிதி மோசடிக்கு உதவிய மூன்று பேரும் அடங்குவர்.

கடந்த ஆண்டு மே மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வயம்ப மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, மோசடி குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.

மேலதிக விசாரணை

விசாரணையின் அடிப்படையில், 30 முதல் 38 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முருத்தலாவ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

நிகழ்நிலையில் விளம்பரப்படுத்தப்பட்ட தண்ணீர் மோட்டார் வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் போல் நடித்து, பணத்தை டெபாசிட் செய்ய விற்பனையாளரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒன்-டைம் கடவுச்சொல்லை (OTP) பெற்று, பணத்தை மோசடி செய்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு சந்தேக நபர்களும் இன்று வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். CIDயின் வயம்ப மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version