Home இலங்கை சமூகம் மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

0

மியன்மாரில் (Myanmar) உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் ,தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் சைபர் குற்றவாளிகளின் பிடியிலிருந்து 30 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட11 இளைஞர்கள் மற்றும் 02 இளம் பெண்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version