Home இலங்கை அரசியல் அநுர அரசில் நான்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

அநுர அரசில் நான்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

0

2025ஆம் ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில், 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஜனாதிபதிக்கு கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கும் ஜனாதிபதியுடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிற்கும் பின்வரும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு,

டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவிகள்

பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, தொழிலாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரது அமைச்சர் அருண் ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.


you may like this

https://www.youtube.com/embed/TXguoOVhGfg

NO COMMENTS

Exit mobile version