Home இலங்கை சமூகம் பல உயிர்கள் பறிபோன இடத்தில் DJ விருந்து! சமூக வலைதள விமர்சனங்களால் திணறும் இராணுவம்

பல உயிர்கள் பறிபோன இடத்தில் DJ விருந்து! சமூக வலைதள விமர்சனங்களால் திணறும் இராணுவம்

0

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னரான DJ இரவுக்கும் இராணுவத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

கோர விபத்தில் பல உயிர்கள் பலியான பின்னரும் அங்கு Fox Hill Journey எனும் DJ நைட் ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது.

பலரது உயிரை பறித்த கோர விபத்து! சந்தேகநபர்களுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

DJ இரவு விருந்து

இது தொடர்பில் இலங்கை இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் Fox Hill Journey எனும் DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், Fox Hill Supercross கார் பந்தயத்தை காண வரும் பார்வையாளர்களை குறிவைத்து Fox Hill Journey DJ நைட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு இராணுவமும் அதிர்ச்சியடைந்திருந்த வேளையில், இராணுவத்தினரோ அல்லது இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தினரின் ஆதரவின்றி முழு Fox Hill Journey DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே தவறவிடாதீர்கள்! தமிழர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உடனடி வேலைவாய்ப்பு

இதேவேளை நாட்டில் ஐந்தாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நடைபெறும் போது ஏப்ரல் 21 ஆம் திகதி ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் பந்தயத்தை ஏற்பாடு செய்தமை தற்செயலானது என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி மற்றும் கடைசி மோட்டார் பந்தயம் நடத்தப்பட்ட அதே நாளில் நடத்துவதற்கு பந்தய அமைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திகதி குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு உரையாடல்கள் மூலம் பொது விமர்சனங்கள் நடந்து வருகின்றன.

நான்கு வருட இடைவெளியில் ஏப்ரல் 21 ஆம் திகதி மோட்டார் பந்தயத்தை நடத்தியதற்கு காரணம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து அடுத்த சிறந்த விடுமுறை வார இறுதியாக குறித்த திகதி கருதப்பட்டது மட்டுமேயன்றி வேண்டுமென்றே எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கமாக நாங்கள் எங்கள் விளையாட்டு நிகழ்வுகளுக்கான திகதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, தேசிய விளையாட்டு நாட்காட்டியில் சேர்க்க விளையாட்டு அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படித்தான் இந்த ஆண்டு இந்த நிகழ்வு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை

NO COMMENTS

Exit mobile version