Home விளையாட்டு ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பிரான்ஸ்

ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பிரான்ஸ்

0

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி பிரான்ஸ் கால்பந்து அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து,  உலகக் கோப்பை மீதான ஆப்பிரிக்காவின் ஆர்வம் முடிவுக்கு வந்துள்ளது.

கனடாவை உறுதியான வெற்றியில் வீழ்த்தி 16 வது சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ, இப்போட்டியில் எஞ்சியிருந்த கடைசி ஆப்பிரிக்க நாடாக இருந்தது.

அவர்கள் வெளியேற்றப்பட்டதால், 48 அணிகள் பங்கேற்க உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகளில் எந்தவொரு ஆப்பிரிக்க அணியும் இடம்பெறாது.

பிரான்சின் இந்த ஆட்டம் தீர்க்கமானதாக அமைகிறது.
ஆட்டத்தின் தொடக்கக் கட்டங்களில் மொராக்கோ சிறப்பாக விளையாடி, சிறப்பான தடுப்பாட்டத்தால் பிரான்சுக்கு சாவால் விடுத்தது.

கிலியன் எம்பாப்பே

 இறுதியாக 60-வது நிமிடத்தில், கிலியன் எம்பாப்பே கோல் வலைக்குள் பந்தை அனுப்ப, பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது.

வெறும் ஆறு நிமிடங்கள் கழித்து, உஸ்மான் டெம்பலே பிரான்சின் முன்னிலையை இரட்டிப்பாக்கி, அந்த அணியை ஆட்டத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறச் செய்தார்.

பதிலடி கொடுக்கும் நோக்கில் மொராக்கோ அணி முன்னேறிச் சென்றது, ஆனால் பிரான்சின் தற்காப்பை அவர்களால் உடைக்க முடியவில்லை.

இதனால், ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.
முக்கியமான தருணங்களில் பிரான்ஸ் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்தியது, அதே சமயம், நம்பிக்கையளித்த ஆட்டப்பகுதிகளை மொராக்கோவால் கோல்களாக மாற்ற முடியவில்லை.

அவர்களின் உலகக் கோப்பைப் பயணம் காலிறுதியுடன் முடிவடைந்தபோதிலும், ஆப்பிரிக்காவின் வலிமையான கால்பந்து நாடுகளில் ஒன்றாகத் திகழ மொராக்கோ மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளது.

சிறப்புமிக்க அரையிறுதி

2022 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரையிறுதிப் போட்டியில் பங்கேற்று பெற்ற உத்வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

FIFA-வின் அதிகாரப்பூர்வ அட்டவணைப்படி, மீதமுள்ள போட்டிகள் பின்வருமாறு

வெள்ளிக்கிழமை, ஜூலை 10: பெல்ஜியம் vs ஸ்பெயின்

சனிக்கிழமை, 11 ஜூலை: நோர்வே vs இங்கிலாந்து

சனிக்கிழமை, 11 ஜூலை: அர்ஜென்டினா – சுவிட்சர்லாந்து

உலகக் கோப்பைக்கான போட்டி அதன் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெற்றியாளர்கள் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/france-crushes-africa-s-world-cup-dream-fifa-1783664407

NO COMMENTS

Exit mobile version