Home இலங்கை சமூகம் விமான நிலையத்தில் குறிவைக்கப்படும் இலங்கை பெண்கள்: மற்றுமொரு மோசடி அம்பலம்

விமான நிலையத்தில் குறிவைக்கப்படும் இலங்கை பெண்கள்: மற்றுமொரு மோசடி அம்பலம்

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்து பரிமாற்றம் செய்யும் மோசடி கும்பல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிறுவனங்கள் மாத்திரமே வெளிநாட்டு நாணயத்தை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பிரதான விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்யும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி கும்பலின் பிரதான இலக்கு

விமான நிலையத்தில் தயக்கமின்றி உள்ளூர் மற்றும் வெளி நாட்டவர்களிடமிருந்து வெளிநாட்டு கரன்சிகளை கும்பலொன்று வாங்குகின்றமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் இலங்கை பெண்களே இந்த மோசடி கும்பலின் பிரதான இலக்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டின் வங்கி கட்டமைப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு என்பன பாதிக்கப்படும் எனவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version