வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி 70,000 டொலர் மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக்கூறி ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனாவல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஈ.பி. தம்மிகா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், $70,000 மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக் கூறி ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1,255,000/= பணத்தினை வைப்பு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம்
இதனையடுத்து அந்த தொகையில் 680 70,000/- சந்தேகநபரின் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கண்டுபடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
