Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

0

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தை கடந்த 07.11.2025 உயிரிழந்தார்.

இறுதி அஞ்சலி

அவரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஞ்சலிக்காக வருகை தந்துள்ளனர்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி போர்த்தப்பட்டது.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் , முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version