Home இலங்கை குற்றம் ஜப்பான் தொழில் ஆசை காட்டி மோசடி செய்த பெண் தலைமறைவு

ஜப்பான் தொழில் ஆசை காட்டி மோசடி செய்த பெண் தலைமறைவு

0

ஜப்பானில் தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாக வாக்களித்து பணமோசடி செய்த பெண்ணொருவர் தலைமறைவாகியுள்ளதாக கல்கிஸ்ஸைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஜப்பானில் தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாக தெரிவித்து இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் இளைஞர்களிடம் ஐந்து லட்சம் ரூபா வீதம் அறவிட்டுள்ளார்.

தலைமறைவான பெண் 

ஜப்பானில் இரண்டு வருடத்துக்கான தொழில் வீசா பெற்றுத் தர முடியும் என்று வாக்களித்தே அவர் பணம் அறவிட்டுள்ளார்.

எனினும் வாக்களித்தவாறு தொழில் வீசா பெற்றுக் கொடுக்காத அதே நேரம் பணத்தையும் திருப்பிக் கொடுக்காத நிலையில் குறித்த பெண்ணுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் தலைமறைவாகி விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

NO COMMENTS

Exit mobile version