Home இலங்கை சமூகம் வடக்கு மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை: முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

வடக்கு மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை: முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

0

வடக்கிலுள்ள மாணவர்களுக்கு கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெளிந்த பார்வை, பிரகாசமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான கண் பரிசோதனை திட்டம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசகர் மருத்துவ நிபுணர் எம்.மலரவன்
தலைமையில் வட மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (31) இடம்பெற்றுள்ளது.

ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் மருத்துவ நிபுணர்
எம்.மலரவன் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version