Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

0

கடந்த வருடத்தில் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (30) மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் தலைவர் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிர் சேதம்

பயிர் சேதம் அடைந்த விவசாயிகளின் கணக்குகளில் தொடர்புடைய நிதியை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்பயைில், 13,379 ஏக்கருக்கு இன்று (30) இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், இன்றைய இழப்பீட்டுத் தொகை நெல் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version