Home இலங்கை சமூகம் நாளை முதல் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள தொடருந்து சேவைகள்

நாளை முதல் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள தொடருந்து சேவைகள்

0

பல விசேட தொடருந்து சேவைகளை இயக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொசன் விழாவை முன்னிட்டு, இந்த விசேட தொடருந்து சேவைகள் நாளை (09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விசேட தொடருந்து சேவைகள்

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 தொடருந்து பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 தொடருந்து பயணங்களும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் முழு நிதி ஆதரவுடன் இயக்கப்படுவதால், இந்த அனைத்து தொடருந்து பயணங்களும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தங்குமிட வசதிகள்

இதனுடன் இணைந்து தங்குமிட வசதிகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் தொடருந்து திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வசதிகளை தொடருந்து நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version