Home உலகம் தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீயால் பரபரப்பு

தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீயால் பரபரப்பு

0

அமெரிக்காவின்(us) லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது.

திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்து அவசர நிலையை அறிவித்தார்.

விமானத்தில் தீப் பிடித்தது

இதனைத்தொடர்ந்து விமானத்தில் தீப் பிடித்தது. இருப்பினும், விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர்.

விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version