Home இலங்கை குற்றம் முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குண்டர் தாக்குதல்

முன்னிலை சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குண்டர் தாக்குதல்

0

முன்னிலை சோசலிசக் கட்சியின் கொழும்பை அண்மித்த பிரதேசமொன்றில் இருக்கும் அலுவலகம் ஒன்றின் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொழும்பை அண்மித்த, கம்பஹா – யக்கலையில் அமைந்துள்ள அலுவலகமே இவ்வாறு வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு(01.09.2025) இடம்பெற்றுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற குண்டர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் லஹிரு வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version