Home இலங்கை சமூகம் அதிகரித்துள்ள பழங்களின் விலை

அதிகரித்துள்ள பழங்களின் விலை

0

பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பழங்களின் விலை

விவசாயிகளுக்கான சாகுபடி மற்றும் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.

இதனால் அவற்றின் விற்பனை குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ மாம்பழம் ரூ.400-500க்கும், அல்போன்சா மாம்பழம் ரூ.1000க்கும், திவுல் ரூ.280-300க்கும், பெல்லி ரூ.500-600க்கும், பப்பாளி பழம் ரூ.400க்கும், கொய்யா ரூ.500-600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பழங்கள் நுகர்வோரை சென்றடையும் போது அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கிறது, இதனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version