Home இலங்கை சமூகம் இஸ்ரேல் – ஈரான் யுத்தம்! மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

இஸ்ரேல் – ஈரான் யுத்தம்! மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள்  நிரப்புவதற்காக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

எரிபொருளுக்கு பற்றாக்குறை

இந்தநிலையில் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று அஞ்சி இலங்கை மக்கள் எரிபொருளினைப் பெற்று சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதன்படி, நேற்றையதினம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு எரிபொருள்
நிலையத்தில் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர். 

இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version