Home உலகம் ரஷ்யாவின் திடீர் முடிவு: நகர்வெடுக்கும் அமெரிக்க விமானங்கள்: சிதறப்போகும் ஈரான்!

ரஷ்யாவின் திடீர் முடிவு: நகர்வெடுக்கும் அமெரிக்க விமானங்கள்: சிதறப்போகும் ஈரான்!

0

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிலைமை நாளுக்கு நாள் கடுமையாக வருகிறது. இதன் தாக்கம் பல்வேறு நிலைகளில் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்யா எச்சரிக்கையுடன் அறிவித்துள்ளது. இதனுடன், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க எரிபொருள் நிரப்பும் KC-135 மற்றும் KC-46 ரக விமானங்கள் ஐரோப்பாவுக்கு புறப்பட்டுள்ளன.

இவை நடுவானில் பறக்கும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் திறன் கொண்டவை. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இவை ஒரு பெரிய போர்திட்டத்தின் பகுதியாக அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நடுவானில் எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் ஏன்?

இஸ்ரேலின் F-15 போர் விமானங்கள், நீண்ட தூரம் பறக்கக்கூடியவை. ஆனால் F-16 விமானங்கள் போன்றவைக்கு இந்த அளவிலான தூரத்தை கடக்க எரிபொருள் அவசியமாகிறது.

தற்போதைய சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் எந்த நாடுகளும் விமானங்களை தரையிறக்க அனுமதிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், அத்தகைய நாடுகள் மீது கூட தாக்குதல் நடத்த ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால்தான், இஸ்ரேல் மற்றும் அதனை ஆதரிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள், நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை முக்கிய பங்காக பார்க்கின்றன.

அமெரிக்க படைகள் நேரடியாக ஈரானை தாக்க வாய்ப்பு?

ஈரானின் அணு தளங்கள் அல்லது ராணுவ வளாகங்களை இஸ்ரேல் தாக்கும் சூழ்நிலையில், அமெரிக்கா நேரடியாக ஈரானுடன் மோதும் சாத்தியம் குறித்து பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

குறிப்பாக, ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் இருப்பது, இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கும் முன், அமெரிக்கா ஈரானிடம்—தங்களது தளங்களை தாக்கவேண்டாம் என கோரியதாகவும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அமெரிக்கா நேரடியாக ஈரானைச் சவாலுக்கு அழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவின் நடவடிக்கையை எப்படி புரிந்து கொள்ளலாம்?

இத்தனை அதிர்வுகளை இணைத்து பார்க்கும் போது, ரஷ்யா தனது குடிமக்கள் மீது கவலை கொண்டிருப்பது இயல்பானதாகிறது. குறிப்பாக, எகிப்து வழியாக 24 மணி நேர உதவியுடன் வெளியேற வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்பதும், இந்த எச்சரிக்கையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

அணு ஆயுத போர் அபாயம்?

இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடரும் பட்சத்தில், ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை மேம்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இது, உலகளாவிய அணு போர் அபாயத்துக்கே வழிவகுக்கும். இந்தியா-பாகிஸ்தான் போன்ற ஏற்கெனவே பதற்றத்தில் உள்ள நாடுகளுக்கிடையே கூட இந்த பதற்றம் பரவி விடலாம்.  

NO COMMENTS

Exit mobile version