Home இலங்கை சமூகம் புதிய விலை சூத்திரத்திற்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய விலை சூத்திரத்திற்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இன்று (04.03.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“இந்த புதிய சூத்திரம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

எரிபொருள் விநியோகம்

விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்த திட்டங்களை மறுஆய்வு செய்ய மார்ச் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, எரிபொருள் விநியோகம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு விசாரணை

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க (Kusum Sandanayaka) மற்றும் சாந்த சில்வா (Shanta Silva) உள்ளிட்ட பணிபபாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version