Home இலங்கை சமூகம் பல இடங்களில் எரிபொருள் கசிவு: சேதமடைந்த விமான எரிபொருள் குழாய்

பல இடங்களில் எரிபொருள் கசிவு: சேதமடைந்த விமான எரிபொருள் குழாய்

0

இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் குழாய் வெடித்ததன் காரணமாக பல இடங்களில் இருந்து எரிபொருள் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருளை கொண்டு செல்லும் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள குழாயொன்று இவ்வாறு சேதமடைந்துள்ளது.

இது, JET A1 விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் குழாய் என்று கூறப்படுகிறது.

சீரமைக்கும் பணி

இந்த நிலையில்,   அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஸ்தல பரிசோதனையின் போது இந்த குழாய் கொழும்பு – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 33,000-வாட் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பு மற்றும் வீடுகள் குழாயைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறான பின்னிணியில், கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணெய் பௌசர் மூலம் கசியும் எரிபொருள் அகற்றப்பட்டு வருவதுடன், குழாயை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version